மங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டம், எஸ்டிபிஐ திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது,இந்த பொது கூட்டத்திற்கு தலைமை முகமது ஆசாத் பல்லடம் தொகுதி செயலாளர் வரவேற்புரை ரஹ்மத்துல்லா பல்லடம் தொகுதி செயற்குழு உறுப்பினர், முன்னிலை மன்சூர் அகமது சிறப்புரை எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக்,எம்எஸ்எம். ஆனந்தன். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அமைப்பு செயலாளர், ராஜா உசேன் மாநிலச் செயலாளர் எஸ்டிபிஐ,ஹரீஸ்பாபு தெற்கு மாவட்ட தலைவர்,தஸ்லீமா ஷெரிப் விம்இந்தியா மூவ்மெண்ட் மாநில செயலாளர், இறுதியில் பல்லடம் நகர செயலாளர் நாசர் நன்றி உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போதை கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மங்கலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். இருபத்தி நான்கு மணி நேரம் இயங்கும் வகையில் ஆவண செய்ய வேண்டும்.
தூர்வாரப்பட்ட வேட்டுப்பாளையம் குளம், பல்லடம் அண்ணா நகர் குட்டை, வேட்டு வாளையார் குளம் உள்ளிட்ட குளங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது இந்த குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் குளங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த எழுச்சி மிகு பொதுக் கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment