தாராபுரம் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 July 2024

தாராபுரம் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் திருப்பூர் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் கே. செல்வராஜ் தலைமையில் துணைத் தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். தாராபுரம் நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில்

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 


அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன


இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுமுழுவதும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து திமுக வழக்கறிஞர்கள் ஐந்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாராபுரம் நீதிமன்ற அமைப்பாளர் ராஜேந்திரன் வழக்கறிஞர் சித்திக் அலி மூத்த வழக்கறிஞர் தென்னரசு,ஏவி. எச். ரஹ்மத்துல்லா, உள்ளிட்ட 50. க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad