மாவீரன் பொல்லான் நினைவு நாள் அமைச்சர் கயல்விழி மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 18 July 2024

மாவீரன் பொல்லான் நினைவு நாள் அமைச்சர் கயல்விழி மாலை அணிவித்து மரியாதை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாம் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் 219 ஆவது நினைவு நாள், அனுசரிக்கப்பட்டது இதில் அமைச்சர் கயல்விழி பொல்லான் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.


இந்தியவின் விடுதலை போராட்டத்தில், கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து, தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் மாவீரர் பொல்லான். பிரிட்டிஷ் ராணுவ ரகசியங்களை, தீரன் சின்னமலைக்கு மாறு வேடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். இதனால், 1801 காவிரி கரைப்போர், 1802 அரச்சாலையூர் போர், 1804 ஓடாநிலை போர்களில் தீரன் சின்னமலை வெற்றிக்கு, பொல்லான் முக்கிய பங்கு வகித்தார். இதையறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஆடி, 1ம் தேதி அரச்சலுாரை அடுத்த நல்லமங்காபாளையத்தில், பொல்லானை தலைகீழாக கட்டி கொன்றனர். என அமைச்சர் கயல்விழி இவ்வாறு தெரிவித்தார்


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் செல்வராஜ் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன் திக. சண்முகம். திமுக மகளிர் அணி அமுதா, ஆரோன் செல்வராஜ், ஆதிதிராவிட நலத்துறை சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad