தாராபுரம் அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி அமோக விற்பனை... - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

தாராபுரம் அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி அமோக விற்பனை...


திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 25.07.2024 வியாழக்கிழமை அன்று பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 378நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.7922ற்கும் குறைந்தபட்சவிலை ரூபாய்.6100ற்கும் சராசரி விலை ரூ 6900ற்கும் விற்பனையானது. 


பருத்தியின் மொத்த அளவு 4176மூட்டைகள் , குவிண்டால் 1407.40மதிப்பு ரூபாய் 97,96,606/- ஏலத்தில் 16வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர்(பொ), திருப்பூர் விற்பனைக்குழு திரு.தர்மராஜ் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment

Post Top Ad