. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு மன்றத்தின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அனுப்பர் பாளையம் புதூர் வாரச்சந்தை வணிக வளாகத்தில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு வெண்பொங்கல் வழங்கப்பட்டது.
திருப்பூர் திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் எஸ்.எம் எஸ்,முருகேஷ்,
சிறப்பு அழைப்பாளர் திமுக அவைத்தலைவர் ஈஸ்வரன் . தலைமை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் கணேஷ் அவர்கள். முன்னிலை பொதுச் செயலாளர் பாசமலர் பாண்டியன் மற்றும் திரளான பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment