தாராபுரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 5, 6 ஆகிய வார்டு பகுதிகளில் மழைநீர் வடிகால், சிறியபாலம் மற்றும் சிமெண்ட் சாலை ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் கு. பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தாராபுரம் நகர் மன்ற உறுப்பினர்கள் முபாரக், சாந்தி இளங்கோ, நகராட்சிப் பொறியியல் பிரிவு மேற்பார்வையாளர் பிரபாகரன், துப்புரவு மேற்பார்வையாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment