திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஒன்றாவது மண்டலம் இருபத்தி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கந்தசாமி லே-அவுட் மற்றும் சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை 22 ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் உடன் 22 வது வார்டு வட்ட திமுக செயலாளர் வி. ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர். வேலுச்சாமி சென்ராயன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர். புதிய தார் ரோட்டை அமைக்கும் பணிகளை உடனிருந்து ஆய்வுப் பணிகளை செய்த 22 ஆவது மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் அவர்களை வார்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment