ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையம் சார்பில் பல்லடம் ரோடு டிஆர்ஜி மண்டபத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்த கோவை இஸ்கான் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா மண்டல செயலாளர் தவத்திரு பக்தி வினோத சுவாமி மஹராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். ஸ்வாமிஜி அவர்கள் நிகழ்ச்சியில் சொற் பொழிவாற்றினார் மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களுக்கு மாலை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய செயலாளர் அசோக், மாவட்ட திமுக துணை செயலாளர் பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய பெருந்தலைவர் தேன்மொழி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரன், மற்றும் பகுதி கழக செயலாளர் மு க உசேன், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment