திருப்பூர் நெரிப்பெரிசல் அரசு குடியிருப்பு வாசிகள் சொத்து வரி குறைக்கவும் அடிப்படை வசதிகள் கோரியும் மேயரிடம் மனு கொடுத்தனர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 23 August 2024

திருப்பூர் நெரிப்பெரிசல் அரசு குடியிருப்பு வாசிகள் சொத்து வரி குறைக்கவும் அடிப்படை வசதிகள் கோரியும் மேயரிடம் மனு கொடுத்தனர்



திருப்பூர் நெரிபெரிச்சலில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திருக்குமரன் நகர், ஜெயா நகர் , பாரதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 1778 வீடுகளில் பயனாளிகள் கடந்த இரண்டு வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வீட்டிற்கு வருடம் வீட்டு வரி ரூ 3000 கட்டுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் இதைத்தொடர்ந்து 7  சங்க நிர்வாகிகள் திருப்பூர் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.


 இந்த மனுவில் ஒரு வீட்டிற்கு வருடம் வீட்டு வரியாக ரூ 3000 கட்டுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும்  இந்த வரியை குறைக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் மேயரை நேரில் சந்தித்து  மனு அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்

வரி விகிதத்தை குறைக்கவும், அடுக்குமாடி குடியிருப்புகளில் காம்பவுண்ட் சுவர் இல்லாத தால் வெளி நபர்களால் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறது எனவே காம்பவுண்ட் சுவர் உடனடியாக  கட்ட வேண்டும்   


என்றும் புதிய அங்கன்வாடி கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீர் வினியோகம் முறைப்படுத்தவும், சிறுவர் விளையாட்டு பூங்கா, மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க கோரியும் அரசு பேருந்து வசதியை அதிகப்படுத்தவும் மேயரிடம் கோரிக்கை வைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் ஆ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

No comments:

Post a Comment

Post Top Ad