திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு அம்பேத்கர் தெரு மற்றும் 14வது வார்டு நேரு நகர் ஆகிய இரண்டு வார்டுகளில் தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் தலைமையில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் முன்னிலையில் அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு விவரத்தை விளக்கமாக பாப்பு கண்ணன் விளக்க உரையாற்றினார்.
இந்நிலையில் அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு அன்றைய முதல்வரும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது.
அன்று அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை வந்தது இந்த விசாரணையில் ஆறு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு ஏற்றுக் கொள்ளப்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக அம்பேத்கர் தெரு மற்றும் நேரு நகர் பகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக நகர அவைத்தலைவர் கதிரவன், துணைச் செயலாளர் தவச்செல்வன், மாவட்ட பிரதிநிதி ஐயப்பன், நகர் மன்ற உறுப்பினர் மொரட்டாண்டி, கிளைக் கழக செயலாளர் ரவிச்சந்திரன், சுப்பிரமணி, சசிகலா பிள்ளை முத்து, மரக்கடை கணேசன், ஜீவா ஜெயக்குமார், ஜீவா பெரியசாமி, அப்பாஸ் அலி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment