தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் அருந்ததியர் மக்களுக்கு இனிப்பு வழங்கினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் அருந்ததியர் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 

2009 ஆம்ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அருந்ததியர் சமூகத்துக்கான 3% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக திருப்பூர் தெற்குமாவட்டம் தாராபுரம்  ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பாலசுப்பிரமணியம்நகர் அருந்ததியர் காலனி மக்களுக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள்  தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேவராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் நாகராஜ்,, மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சிவசங்கரன், ஊராட்சி வார்டு உறுப்பினர் தனலட்சுமி நாகராஜ்  மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad