தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய கட்சியாக விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கியுள்ளார் இதன் கொடி அறிமுக விழா நடைபெற்றது இதை தொடர்ந்து திருப்பூர் மத்திய மாவட்ட தலைவர் எஸ்.பாலமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடக்கு தலைமை கழகத்தின் சார்பாக
அனுப்பர்பாளையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வினை அனுப்பர்பாளையம் பகுதி தலைவர் துர்கா சங்கர், கோவிந்தராஜ் , மணிகண்டன் , வேலுமணி ,இன்சிலி, கார்த்திக், சரவணகுமார், பிரகாஷ் , யோகேஷ், சிவப்பிரகாஷ், மதன் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment