தென்னிந்திய மண்டல அளவிலான கராத்தே போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில் திருப்பூர் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னை சாந்தோமில் கராத்தே இந்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அமைப்பின் சார்பில் மூன்றாவது தென்னிந்திய மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் திருப்பூரை சேர்ந்த சேடோகாய் கராத்தே அமைப்பின் 11 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் ஆசிரியர் கௌதம் ரகுநாதன், பயிற்சியாளர்கள் சிகான் குமார், ரஞ்சி சாரதி ஆகியோரை திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ)ஜி. சுப்பிரமணி அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். உடன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment