திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீடு அலுவலகம் இயங்குகிறது இந்த அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வருகின்றனர். இந்த நிலையில் இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த சாய்வு தளம் பாதை அமைக்கப்பட்டுள்ளது இந்த சாய்வுகளை பாதையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குறுக்கே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் படிக்கட்டுகளில் மிக மிக சிரமப்பட்டு ஏறி வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பாதை முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கோரிக்கையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment