திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான கேஸ் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் வரும் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் முகவர்கள் எண்னை நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கேஸ் நுகர்வோர்கள் தங்களுடைய கேஸ் புத்தகத்துடன் பங்கு பெற்று புகார்களை தெரிவிக்கலாம். பெரும்பாலும் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு நுகர்வோரிடம் ரூபாய் 50 முதல் டெலிவரி சார்ஜ் வாங்குகின்றனர். மேலும் சிலிண்டர்களை எடை போட்டு நுகர்வோருக்கு தருவதில்லை இது போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி நுகர்வோர்கள் இந்த நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம் படத்தில் இருப்பது திருப்பூர் பி,என் ரோட்டில் வசிக்கும் சமூக ஆர்வலரான எஸ்பி துரை என்பவர் தனது வீட்டுக்கு வரும் சிலிண்டர்களை எடை போட்டு மட்டுமே வாங்குவதாகவும் டெலிவரி சார்ஜ் ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை என்றும் பொதுமக்களுக்கும் இந்த விழிப்புணர்வு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment