திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துபுஞ்சை தெரு காளியம்மன் கோவில் அருகில் அண்ணாச்சி மளிகை கடைக்கு முன்பு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக சாக்கடை கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடப்பதால் இதனால் அப்பகுதியில் கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக சுமார் 3 அடி முதல் 5 அடிவரை தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவு நீரில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ,மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .
No comments:
Post a Comment