வயநாடு பேரிடருக்கு திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் தெற்கு எம்எல்ஏவிடம் நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 August 2024

வயநாடு பேரிடருக்கு திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் தெற்கு எம்எல்ஏவிடம் நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.


உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் சார்பில் அரிசி பருப்பு ,மளிகை பொருட்கள், பிஸ்கட், போர்வை, பெட்ஷீட், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பள்ளியின் சார்பிலும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் சார்பிலும் கிட்ஸ் கிளப் கல்வி குழுமங்களின் தலைவர் மோகன் கே. கார்த்திக் அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்களிடம் வழங்கினார்கள். இந்த நிவாரண பொருட்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று க.செல்வராஜ் எம் எல் ஏ தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில தொமுச துணைச் செயலாளர் தெற்கு மாநகர திமுக செயலாளருமான டிகேடி.மு.நாகராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad