ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டப்பட்டது இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மலையில் உள்ள ஓடா நிலையில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு நேரில் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் கோவைலிருந்து பல்லடம் வழியாக இளைஞர் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரன் அடித்தும் தாறுமாறாக ஓட்டியும் ஆங்காங்கே பட்டாசு வெடித்தபடி சென்றனர்.
கோவை திருச்சி தேசிய சாலையில் செட்டிபாளையம் பிரிவு அருகே வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்தி பட்டாசுகளை வெடித்து மற்ற வாகன ஓட்டிகளையும் பொது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் இந்த செயல்களால் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்திற்கு புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் இந்த அரசியல் கட்சி யினர் நடந்து கொண்டனர்என்றுமக்கல் புலம்பினர் மேலும் அவிநாசி திருப்பூர் சாலைகளிலும் வாகனங்களில் சாலை விதிகளை மீறும் வகையில் பயணம் செய்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர்.
இங்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியினர் இதுபோல மக்களை அச்சுறுத்தும் வகையில் அஞ்சலி செலுத்த பயணம் செய்வதும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் மக்களிடையே தமிழக அரசின் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment