பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 August 2024

பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு




 திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து,பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு நான்கு (4) சுற்றுகள் 18.08.2024 முதல் 16.12.2024 வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு 8000  மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசுஆணையிட்டுள்ளது.


இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் ஆக மொத்தம் 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்(நீர்வளத்துறை) தெரிவித்துள்ளார்.....


திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு 18.08.2024 முதல் 31.05.2025 முடிய, நீரிழப்பு உட்பட,மொத்தம் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


தமிழக குரல் செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad