திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் அவர்களின் தலைமையில் நகர ஒன்றிய பேரூராட்சி கிளை மன்றங்கள் சார்பாக மன்ற வளர்ச்சிப் பணி மற்றும் நற்பணி குறித்த கலந்தாய் ஆலோசனைக் கூட்டம் நாமகிரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அதில் எழுச்சியும் வளர்ச்சியும் 1) புதிய பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் தொலைநோக்குப் பார்வை 2021-2025 ஒரு லட்சம் பனை விதை நடவு 4-ஆம் ஆண்டு தொடர்ச்சி 2) ஒவ்வொரு பகுதிகளிலும் மன்ற பெயர் பலகை திறப்பு 3) அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி பயிலும் மழலைச் செல்வங்களுக்கு நோட்டு புக் பென்சில் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை நற்பணிகளாகவும் 4) தங்களின் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று இலவச வீட்டுமனை பட்ட முதியோர் உதவித்தொகை அரசு சம்பந்தப்பட்ட திட்டங்களை சேவைப் பணியாக முன்னெடுத்து செய்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது... மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக், மாவட்டத் துணைப் பொருளாளர் ஈஸ்வரன், தொகுதி பொறுப்பாளர் மணிவாசகம்,குண்டடம் ஒன்றிய தலைவர் தீவாசிவக்குமார்,உதய பிரகாஷ்,தினேஷ், பொன்னுச்சாமி, தாரை ஒன்றிய துணைத் தலைவர் சென்னியப்பன், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் முருகேசன், துணைத் தலைவர் தங்கராஜ், ஒன்றிய பரிந்துரையாளர் உதயகுமார்,நகரத் தலைவர் கார்த்திக், நகரத் துணைத் தலைவர் நூருல் ஹசன், நகரப் பொருளாளர் சாகுல் அமீது, எம்ஜிஆர் நகர் இனியவன், பிரவீன், ஹரிஹரன், கரையூர் காளிதாஸ்,காளிமுத்து, நிகிலேஷ்,சுப்பிரமணி, கவின் குமார் கௌதம் இளங்கோ கருப்புசாமி நூற்றுக்கு மேற்பட்ட இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் இயற்கை விரும்பி சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக்.
No comments:
Post a Comment