தாராபுரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 August 2024

தாராபுரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னாபுரம், பெட்டிக்காம்பாளையம், கோவிந்தாபுரம், சின்னக்காம்பாளையம், அலங்கியம், வரப்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. அவ்வப்போது சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. மேலும் குளிர்ந்த காற்று வீசுவதால் வயதான முதியவர்கள் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வப்போது பெய்த சாரல் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad