தமிழ்நாடு அரசு விளையாட்டு துறையில் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் நிலையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருப்பூர் ஏவிபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்றனர் இவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து திருப்பூர் திரும்பிய வெற்றி வீரர்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களிடம் வெற்றி பதக்கங்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்போது செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் மாணவ,மாணவிகளை வெகுவாக பாராட்டி அவர்கள் மென்மேலும் பல்வேறு பரிசுகளை பள்ளி மாணவ, மாணவிகள் இளைஞர்கள் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் அதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துணை நிற்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர அவைத் தலைவர் க. ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் 14வது வட்ட கழக செயலாளர் மு .ரத்தினசாமி, வாரிய தலைவர் பி எஸ் பாண்டியன் 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வடக்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் திருமதி என் கௌரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment