திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் உத்தம பாளையம் கிராமத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் வாழும் பொது மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. அந்த மனுவில் தங்கள் வசிக்கும் பகுதி மீனாட்சிபுரம் . இங்கு வாழும் மக்களுக்கு மீனாட்சி புரம் அருகில் உள்ள காளம் எண் 102 கொண்ட சுடுகாடு இடத்தை தனியார் ஒருவர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்து அமைத்துள்ளதாகவும் கம்பி வேலி நீக்கி பொது மக்கள் அடிப்படை தேவையான சுடுகாடு இடத்தை மீட்டு தரவும் அங்கே புதைக்கப்பட்டுள்ள முன்னோர்களை வழிபாடு செய்திடவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர் . இதன் பேரில் மனு மீது தக்க நடடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment