திருப்பூர் மாநகராட்சி, இடுவம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக மறுசுழற்சி பொருட்களின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தைமரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் நா. தினேஷ் குமார் திறந்து வைத்தார்.
மேலும், மைதானம் அமைத்ததற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் திரு.பிரவாஷ் குமார் சுபுதி அவர்கள் 10 பள்ளிகளுக்கு ரூ.20 இலட்சம் காசோலையாக வழங்கினார்கள்.
நிகழ்ச்சியானது ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
துணை மேயர் திரு.ரா.பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் கல்வி நிலை குழு தலைவர், 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெ.திவாகரன், 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுபத்ரா தேவி ஆனந்தன், எஸ்பிஐ வங்கியின் (ரீஜனல்மேனேஜர்) சங்கரா சுப்ரமணியம், பள்ளி தலைமையாசிரியர் .ரவிபால் ஜேம்ராஜ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment