திருப்பூரில் முத்தம்மாள் அறக்கட்டளை, திமுக சார்பில் கேரம்போட்டி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழாவாக
திமுக மாணவர் அணி மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக - முத்தம்மாள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து நடத்திய,
தெய்வத்திரு க.முத்தம்மாள் – க.திலகவதி நினைவு கோப்பைக்கான 2-ம் ஆண்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) பல்வேறு மாநிலங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் கடந்த 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது...
இதன் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவினை திமுக நிர்வாகி, முத்தம்மாள் அறக்கட்டளை தலைவர் எஸ்.திலக்ராஜ் தலைமை வகிக்க, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத் துரைசாமி வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்வில்,
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதலிடம் பிடித்த மகாராஷ்ட்ராவை சேர்ந்த வீரர் முகம்மது குபுரான் அவர்களுக்கு டாக்டர் கலைஞர் கோப்பையுடன் ரூ.1,00,000 ரொக்கப்பரிசும், 2-வது இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த வீரர் அப்துல் ஆசிப் அவர்களுக்கு இனமான பேராசிரியர் கோப்பையுடன் ரூ.50,000 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த யோகேஷ் டோஸ்ரே அவர்களுக்கு க.முத்தம்மாள் கோப்பையுடன் ரூ.25,000 ரொக்கப்பரிசும், 4-வது இடம் பிடித்த சென்னையை சேர்ந்த வீரர் சகாய பாரதி அவர்களுக்கு க.திலகமணி கோப்பையுடன் ரூ.15,000 ரொக்கப்பரிசும் மற்றும் திருப்பூர் மாவட்ட கபாடி குழு தலைவர் ஜியோ செல்வராஜ் ஏற்பாட்டில் முதலிடம் பெற்ற வீரருக்கு 1 பவுன் தங்க நாணயமும், 2, 3, 4 இடம் பெற்ற வீரர்களுக்கு 1/2 பவுன் தங்க நாணயமும் வழங்கினார்கள் உடன் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி.மு.நாகராஜன், மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர், வடக்கு மாநகர திமுக செயலாளர் ந.தினேஷ்குமார்,
52 வது வட்ட கழக செயலாளர் நந்தகோபால் ,14 வது வட்ட திமுக செயலாளர்மு.ரத்தினசாமி மற்றும் மகளிர் அணியினர், மாநில,மாவட்ட,மாநகர,பகுதி,ஒன்றிய,வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
No comments:
Post a Comment