மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 13 August 2024

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்



 திருப்பூர் அவினாசியில் கம்யூனிஸ்ட் கட்சியின், அவிநாசி ஒன்றிய குழுவின் சார்பில், மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கிற மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடி யாக திரும்ப பெற கோரி ,மாநிலம் தழுவிய சட்ட நகல் எரிப்பு போராட்டம், அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பு‌  நடைபெற்றது. இந்த போராட்டத்தில்

மத்திய அரசினால் ஜூலை. 1 .2024 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குற்றவியல் சட்டங்களால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், சுப்ரீம் கோர்ட் அறிவித்திருக்கும் படியான நடை முறைகளுக்கு மாறாகவும் ,

பழைய காலணி ஆதிக்க த்திலிருந்த  சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று சொல்லுகிற பிஜேபி அரசு முழுக்க முழுக்க பாரதிய ஜனதா ,

,ஆர். எஸ். எஸ் அமைப்புகளின் அமைப்புகளுக்கு சாதகமாகவும்,

 நாடு முழுவதும் நடைபெறுகிற குற்ற செயல்களை நியாயமான முறையில் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொண்டு செயல்படுவதற்கு பதிலாக, இந்தி திணிப்பு என்கின்ற நிலையில் மூன்று புதிய சட்டங்களையும் சமஸ்கிருதத்தில் அமல்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான செயலாகும்.

 இந்த மூன்று சட்டங்களால் விசாரணை என்கின்ற பெயரில் சாதாரணப்பட்ட மக்களை காவல்துறை காவல் நிலையத்திலேயே வைத்து நியாயத்திற்கு புறம்பாக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மிக மோசமான மக்கள் விரோத இந்த சட்டத்தை ஒன்றிய பிஜேபி அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.

மத்திய பிஜேபி அரசு இதற்கு  பின்னரும் இந்த சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தேசம் தழுவிய அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்க வேண்டாம் என ஒன்றிய அரசை கேட்டு கொள்கிறோம். என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் ,இந்திய  மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பி.நதியா தலைமையில் , இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் அவிநாசி ஒன்றிய செயலாளர் இரா.முத்து சாமி துணைச் செயலாளர் வி. கோபால் வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில துனைத்தலைவர்

வி .கே. சுப்பிரமணியன் மாவட்ட க்குழு உறுப்பினர்

 ஆர். ஷாஜகான் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 

எந். செல்வராஜ்

 ஏ .ஆர் .கந்தசாமி 

 கே.சாமிநாதன்

எம்.பேபி

எஸ்.ஷேக்ஸ்பியர்

வி.எஸ்.பழனிச்சாமி

 பி .ராஜேந்திரன்

பாரூக் 

 என்.சாவித்திரி மற்றும் கிளை நிர்வாகிகள் அ.யாசின் 

நாசர் அலி ,

கனகராஜ் உள்ளிட்ட  பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad