தாராபுரம் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 August 2024

தாராபுரம் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி




திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள விவேகம் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமை ஏற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். காவல் ஆய்வாளர் விஜயசாரதி பள்ளி தாளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க, பழைய நகராட்சி அலுவலகம் எதிரே துவங்கிய இந்த பேரணி பூக்கடைக் கார்னர் பொள்ளாச்சி ரோடு வழியாக சென்று தாராபுரம் பஸ் நிலையத்தை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் போதைப் பொருள் ஒழிப்பது பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் போதை பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்ட வாறு சென்றனர்..

No comments:

Post a Comment

Post Top Ad