திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரக் கழகத்தின் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் கட்சியின் வளர்ச்சி பணிகளை எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்கள்.
நகரச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார்,நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன்,மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் இறுதியில் நகர அவைத்தலைவர் கதிரவன் நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment