தாராபுரம் இரும்பு கடையில் தீ விபத்து. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 August 2024

தாராபுரம் இரும்பு கடையில் தீ விபத்து.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே உள்ள ஆர். எஸ். வி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ பிரபு இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி, இவர் பெஸ்ட் மெட்டல்ஸ் என்ற பெயரில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர் இன்று அதிகாலை கடையில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர் இதனால் தீ பக்கத்து கடைகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.


வாகனத்தில் தண்ணீர் தீர்ந்தது இதனால் மாற்று ஏற்பாடு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு தண்ணீர் லாரிகளை வரவழைத்து அதிலிருந்து தீயணைப்பு வாகனத்திற்கு தண்ணீர் மாற்றப்பட்டு அதன் பிறகு இரண்டு தீயணைப்பு வாகனங்களும் இரண்டு தண்ணீர் லாரிகளும் மாற்றி மாற்றி தண்ணீர் பீச்சி அடித்து தீயினை அணைத்து வருகின்றனர்.


இருப்பினும் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சுமார் 8, லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமானது காற்றின் மூலம் தீ' பரவியதால் மின்கசிவால் தீ விபத்தா என்ன என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad