சென்னை ஆயுதப்படை ஐஜியாக இருந்த லட்சுமி அவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டார் . கமிஷனர் ஆக பொறுப்பேற்ற பின் அவர் கூறியதாவது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் குற்றங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் தொடர்பாக தனிப்படையினர் மூலம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இவ்வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் நகரின் வளர்ச்சி மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கண்காணிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார் முன்னதாக குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட குற்றங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் லட்சுமி அவர்கள் தெரிவித்தார் இவரை பற்றி சிறிய குறிப்பு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அந்தஸ்தான பின் 14 வது கமிஷனர் ஆக லட்சுமி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் குரூப் 1 தேர்வு மூலம் 1997இல் டிஎஸ்பியாக திருவண்ணாமலையில் இவர் தனது பணியை துவக்கினார் பின் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏடிஎஸ் பி மற்றும் எஸ் பி யாக இருந்தார் சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் டி நகர் மைலாப்பூர் கோவையில் துணை கமிஷனர் லஞ்ச ஒழிப்பு துறை போன்ற பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கை திறம்பட அமல்படுத்தி அதற்கான உத்தமர் காந்தி பதக்கம் 20 18 ஆண்டில் பெற்றார் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதி பதக்கமும் பெற்றார் திருவண்ணாமலையில் சந்தன ஆயில் கடத்தல் தடுத்தது தொடர்பாக பாராட்டுக்களை பெற்றுள்ளார். இனி திருப்பூர் மாநகரத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் மதுபான பார்கள் 24 மணி நேரம் செயல்பாடுவதை தடுப்பார் என்று சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment