திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நடந்த ஒரு மாபெரும் விபத்தை தடுத்த டிராபிக் போலீசாரை வெகுவாக பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் தாராபுரம் பகுதி அலங்கியம் ரவுண்டானா பைபாஸ் ரோடு சிக்னலில் கனரா வாகனம் ஈச்சர் வண்டி திடீரென்று பழுதாகி அங்கே நின்று விட்டது இதை அறிந்த தாராபுரம் டிராபிக் போலீசார் விரைவாக வந்து அவர்கள் முயற்சியால் சரி செய்தனர்.
பிறகு பைபாஸ் ரோடு என்பதால் விபத்து ஏதும் நடக்காமல் இருப்பதற்கு தன் கடமை செய்வது மட்டுமில்லாமல் அந்த வண்டியை வெகுவாக தள்ளி அங்கு ஓரமாக நிப்பாட்டி சென்றதால் மற்ற வாகனங்களுக்கு இடஞ்சல் இல்லாமல் போக்குவரத்தை சரி செய்தார்கள் ஒரு சில அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உள்ளது அதையெல்லாம் பொறுப்பெடுத்தாமல் தன் கடமை செய்வதோடு மட்டுமில்லாமல் பொது மக்களுக்காக விபத்து ஏற்பட்டு விடும் என்று முன்னெச்சரிக்கையாக தாராபுரம் டிராபிக் போலீசாரை அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் சேவை செம்மல் கே.வி.சிவசங்கர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
No comments:
Post a Comment