நாட்டையே திகைத்திட செய்த வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி, தலைமை கழக பொதுக்குழு உறுப்பினரும் காதர் பேட்டை அர் ரஹ்மான் டிரஸ்ட் தலைவர் சலீம் (எ) ஹாஜியார் எஸ்.எஸ். அப்துல்ரஹ்மான் அவர்கள் ஏற்பாட்டில், முன்னிலையில் வயநாடு மக்களுக்கு தேவைப்படும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஆடைகள் அடங்கிய வானத்தை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிவாரண பொருட்களை வாகனத்தை வழியனுப்பிய நிகழ்வில் மாநில தொமுச துணை செயலாளர், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன் , வடக்கு மாநகர செயலாளர், மரியாதைக்குரிய மேயர் ந.தினேஸ்குமார், மற்றும் காதர் பேட்டை அர் ரகுமான் டிரஸ்ட் பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment