தாராபுரம்:ராகுல் காந்திக்கு எதிராக பேசிய பாஜக, சிவ சேனா தலைவர்கள்: திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 21 September 2024

தாராபுரம்:ராகுல் காந்திக்கு எதிராக பேசிய பாஜக, சிவ சேனா தலைவர்கள்: திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார்!



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் ராகுல் காந்திக்கு எதிராக கடுமையாகப் பேசிய பாஜக மற்றும் சிவ சேனா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாராபுரம், அலங்கியம், குண்டடம், மூலனூர், உடுமலை, மடத்துக்குளம், உள்ளிட்ட பதினோரு காவல் நிலையங்களில்

காங்கிரஸ் கட்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.


பாஜக தலைவர்கள் தர்விந்தர் சிங் மார்வா, ரவ்நீத் சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


புகார் அளிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தெரிவிக்கையில்


“மறைந்த இந்திரா காந்தி மற்றும் மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் பிறகும் இதுபோன்ற மிரட்டல்களை அவர்கள் விடுக்கிறார்கள். இந்திய அரசியலை இதைவிட கீழ் நிலைக்கு தள்ள முடியாது வெறும் ஒரு பாஜக தலைவர் மட்டுமல்ல, பல தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னார்கள். ஆனால் பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



ராகுல் காந்தி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகிறார். அதனால்தான் பாஜகவினர் அவருடைய வார்த்தைகளை விரும்பவில்லை. அதனால் தான் அவரை மிரட்டுகின்றனர். ஆனால் - இது காங்கிரஸ் கட்சி, நாங்கள் பயப்படவோ அஞ்சவோ மாட்டோம்” என தெரிவித்தார்.


ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ராகுல் காந்தியை “நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங்கும் கூறியுள்ளார்


ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.


அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும், வன்முறையை தூண்டும் நோக்கிலும் ராகுல் காந்திக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறு பேசி உள்ளனர். இவர்களின் இந்த கருத்துக்கள் டிவி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி உள்ளது.


எனவே, BNS-ன் 351, 352, 353, 61 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த மனு கொடுக்கும் பொழுது காங்கிரஸ் நகர தலைவர் செந்தில் குமார் செய்தி தொடர்பாளர் முருகானந்தம் திருப்பூர் கலைமாமணி கலாராணி. நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன். மற்றும் காண பிரியா அசோக் குமார் ஹக்கீம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad