பெண்கள் நினைத்தால் முன்னேற்றம் அவர்கள் கைகளில் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 22 September 2024

பெண்கள் நினைத்தால் முன்னேற்றம் அவர்கள் கைகளில்


திருப்பூர் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கத்தின் முதல் முயற்சியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில்   வசிக்கும்  பெண்கள் அவர்கள் சொந்த காலில் நிற்பதற்காக செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.


 இந்த குடியிருப்பில் குடியிருக்கும் ஒவ்வொரு பிளாக்கிலும் பெண்கள் ஒருங்கிணைந்து செயற்கை நகை தயாரிப்பு பயிற்சியை மேற்கொண்டு தங்களது பொருளாதாரத்தை உயர்த்த தயாராகி உள்ள நிலையில் மற்ற குடியிருப்பு வாசிகளுக்கு இது ஒரு உந்துதலை கொடுக்கும் என்றே சொல்ல வேண்டும். இது பற்றி சங்க நிர்வாகிகள்  பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேவை வாய்ப்புக்கு பல்வேறு உதவிகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் செய்கின்றனர்.  அதை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் சங்கம் வலிமையுடன் குடியிருப்பு வாசிகள்  ஒற்றுமையுடன் செயல்பட்டால் இத்தகைய வாய்ப்பு தர முடியும் இது முதல் முயற்சியாகும் வரும் நாட்களில் பல்வேறு கைதொழில்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று நல சங்க தலைவர் ராம் குமார் செயலாளர் பழனிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad