இந்தியா கூட்டணி சார்பில் பாராளுமன்ற சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் கே. சுப்பராயன் அவர்கள் அனுப்பர்பாளையம் 14 வது வார்டு பகுதிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெறிவிக்க வந்த பொழுது 14 ஆவது வட்ட திமுக செயலாளர் மு.ரத்தினசாமி அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது . உடன் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளரும் மாண்புமிகு மேயர் நா.தினேஷ் குமார், பகுதி திமுக செயலாளர் கொ.ராமதாஸ், 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு, பாத்திர தொழிற்சங்க பொது செயலாளர் வேலுச்சாமி, பகுதி துணை செயலாளர் மணிமாறன், வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், 10வது வட்ட துணை செயலாளர் கஜேந்திரன், மீனவர் அணி நிர்வாகி ஆறுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment