திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு புகையிலை பொருட்கள் விற்ற 25 கடைகளுக்கு சீல் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 20 September 2024

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு புகையிலை பொருட்கள் விற்ற 25 கடைகளுக்கு சீல்


திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற 25 கடைகள் மூடப்பட்டு, ரூ.6¾ லட்சம் அபராதம் விதிப்பு உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விற்பனை செய்பவர்களின் கடைகளை மூடி உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினர் மற்றும் போலீசார் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள பெட்டி கடைகள், டாஸ்மாக் பார் அருகே உள்ள பெட்டி கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


கடந்த 2 நாட்களில் திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் தடுப்பு சோதனை நடைபெற்றது. இதில் 25 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.6-3/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 25 கடைகளையும் அதிகாரிகள் பூட்டினார்கள். அபராத தொகையை கருவூலத்தில் உள்ள மின்னணு பண பரிவர்த்தனை மூலமாக மட்டுமே செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. 


புகையிலை பொருட்கள் விற்பனை செய்து முதல் முறை குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்கள் கடை பூட்டப்படும். 2-வது முறை குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், 30 நாட்கள் கடைபூட்டப்படும். 3-ம் முறை குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம், 90 நாட்கள் கடை மூடப்பட்டு வியாபாரம் முடக்கப்படுகிறது.பள்ளிகல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சோதனை தொடரும் என்று எச்சரித்துள் ளனர். புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். tn food safety consumer app என்ற செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad