வருமுன் காப்போம் மருத்துவ முகாம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர் கயல்விழி வழங்கினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 20 September 2024

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர் கயல்விழி வழங்கினார்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு ஊராட்சி தேர்பட்டி கிராமத்தில் நடந்த கலைஞரின் வரு முன் காப்போம் மருத்துவமுகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்து கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி னார்.


தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி தேர்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவம் முகாம் நேற்று நடைபெற்றது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ். வி.செந்தில் குமார் தலைமை தாங்கினார். முகாமில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் கலந்து

கொண்டு மருத்துவ முகாமினை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.


தாராபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழிபேசுகையில் தமிழகத்தில் மகளிருக்கு அதிகப்படியான திட்டங் களை தமிழக முதல்அமைச்சர் செய்து வருவதாகவும்,அரசு பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா சேவையையும், நான் முதல்வன் திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயன் பெற்று வருவதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகதெரித்வித்தார்.


மருத்துவ முகாமில் மணக்கடவு கிராமத்தில் வசிக்கும் பொதும்க்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றை இலவசமாக பரிசோதனை மேற்கொண்டனர். முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் வருமுன் காப்போம் மருத்துவமுகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் மணக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. முன்னாள், இன் னாள் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad