திருப்பூர் பி என் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்வர் இதில் இருக்கிற வாகன த்தில் வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஒரு நபர் ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூல் செய்கிறார்.சுமார் நான்கு மணிநேரம் இந்த வசூல் வேட்டை நடைபெறுகிறது.பிறகு அந்த நபர் சென்று விடுகிறார் இந்த உழவர் சந்தையில் டெண்டர் விடப்படவில்லை திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் இதே போல் ரசீது கொடுக்காமல் வாகன ஓட்டிகளிடம் உள்ளே சென்று வர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இங்கு ஏலம் விட்டு இருந்தால் வாகன கட்டணம் வசூல் செய்ய கட்டண விபரம் மற்றும் ஏலம் எடுத்தவர்களின் பெயர் மற்றும் கால விவரங்கள் மக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக தகவல் பலகை வைக்க வேண்டும் என்பது வியாபாரிகள் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment