துரித உணவை அறவே தவிர்க்க வேண்டும் - பேராசிரியர் மாணவர்களுக்கு அறிவுரை
தேசிய ஊட்டச்சத்து வாரம் 01.09.24 முதல் 07.09.24 வரை ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு - 2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்பு
உரையாற்றினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் உடல் ஆரோக்கியமாக இருக்க இயற்கையான பழ வகைகள், காய்கறிகள் சாப்பிட வேண்டும், சிறுதானிய உணவுகளை அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சொல்லுக்கினங்க அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார். பேராசிரியர்கள் முஸ்தாக், சக்தி செல்வம், சந்தனமாரி, தீபக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மது கார்த்திக், நவீன்குமார், லோகேஷ் ஆகியோர் தலைமையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், இயற்கை சார்ந்த உணவுகளை எடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, மனதிறன் வளர்ச்சி, அறிவாற்றல் ஆகியவை மேம்படும் என்பதை நன்கு அறிவேன் போன்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ரேவதி நன்றியுரை கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment