திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 14 September 2024

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி



திருப்பூர் மாநகரம் முழுவதும் வாகனம் ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி சு.லட்சுமி இ,கா,ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் மாநகர காவல் துறையினர் (சட்டம் ஒழுங்கு) மற்றும் கொங்கு நகர் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து திருப்பூர் மாநகரத்தில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.


 மேலும் அவர்களிடம் ஸ்டாப் லைனில் வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தியும் தலை கவசம் கட்டாயம் அணிய வேண்டும் , வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது , மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது , சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது , அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டக்கூடாது , நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல் கட்டாயம் அணிய வேண்டும். போக்குவரத்து சிக்னல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் புகை பதிவு சான்று காப்பீடு சான்று வைத்திருக்க வேண்டும். இண்டிகேட்டர் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.  இதனால் பல்வேறு விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறை நண்பனாக எடுத்துரைத்தனர்.


 மேலும் கொங்கு நகர் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மாநகர காவல் துறை (சட்டம் ஒழுங்கு)

அதிகாரிகள் அவிநாசி ரோடு தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள சிக்னலில் ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளையும், போக்குவரத்து விதிகளை  கடைபிடிக்காத வாகன ஒட்டிகளையும் நிழல் பந்தலின் கீழ் இருக்கைகளில் அமர வைத்து அவர்களுக்கு  சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் அப்போது தான் விபத்து ஏற்பட்டாது என காவல்துறை நண்பனாக அன்புடனும், கண்டிப்புடனும் அறிவுரை வழங்கினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad