தாராபுரம் நகராட்சி என்சிபி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவீன கழிப்பிடம் கட்ட பூமி பூஜை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 13 September 2024

தாராபுரம் நகராட்சி என்சிபி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவீன கழிப்பிடம் கட்ட பூமி பூஜை



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வருகிறது நக ராட்சி என்சிபி அரசு ஆண் கள் மேல் நிலைப்பள்ளி இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகு வகுப்பு வரை 800க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


மாணவர்களின் உபயோகத்திற்காக கூடுதல் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்ட நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாணவர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்வைக்கு கோரிக்கை மனு அளித்தார்.


இதன் அடிப்படையில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரது ஆலோசனையின் பேரில் தாராபுரம் என்சிபி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 14.5 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர்  ஆகியோர் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் புதிய கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.இந் நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சீனிவாசன், முபாரக் அலி, யூசுப், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாதவன் வார்டு நிர்வாகி அக்பர் பாஷா, நகராட்சி மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்கத் நிஷா உட்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad