திருப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் ஒன்று நேற்று (செப்., 26) இரவு புறப்பட்டு சென்றது. அதில் மொத்தம் 50 பயணிகள் இருந்தனர். அந்த பஸ்ஸை திருச்செந்தூர் ஏரலை சேர்ந்த கணேஷ் மூர்த்தி என்பவர் ஒட்டிச் சென்றார். சிகாமணி என்ற நடத்துனராக பணியாற்றினார்.
இந்த பஸ் இரவு 10:30 மணி அளவில் தாராபுரம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. தாராபுரம் அடுத்து சென்று கொண்டிருந்தபோது டிரைவர் இருக்கை அருகே திடீரென்று புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் கணேஷ் மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக பயணிகள் அனைவரையும் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டனர். பின்னர் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பயணிகள் உயிர்த்தப்பினர். பின்னர் மாற்று பேருந்தில் பயணிகளை அனுப்பிவைத்தனர்.
No comments:
Post a Comment