தாராபுரம் நகராட்சி சார்பாக பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 September 2024

தாராபுரம் நகராட்சி சார்பாக பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை


தாராபுரம் நகராட்சி சார்பாக பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த நகர மன்ற தலைவர் பாப்புக்கண்ணன் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வந்தது இதில் நிறைய பொதுமக்கள் பாதிப்படைவதை அறிந்த தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் அவர்கள் உடனடியாக இன்று அவர் தலைமையில் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி போட்டு கருத்தடை செய்து தெருநாய்களின் தொல்லைகளில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


உடன் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் அவர்கள் முன்னிலையில் ,

நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன்,19வது வார்டு நகர மன்ற உறுப்பினர் புனிதா சக்திவேல் ,

நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன்,நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார்,நகராட்சி குடிநீர் மேற்பார்வையாளர் பிரபாகரன்,நகராட்சி மின்சார பிரிவு செல்வராஜ் , ஜெயபால்,கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் அவர்களின் துரித நடவடிக்கையை பார்த்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad