மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப அவர்கள் இன்று (02.09.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து, ஊட்டச்சத்துக் கண்காட்சியை பார்வையிட்டார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள், ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வித் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும்
அரசின் பிற துறைகளுடன் ஒருங்கிணைத்து செப்டம்பர் மாதம் முழுவதும் 'போஷன் மா' என்ற தேசிய ஊட்டசத்து மாத விழா செயல்படுத்தப்படுகிறது.
தேசிய ஊட்டச்த்து மாத விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் திட்டம் சார் விழிப்புணர்வு கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், வட்டார அலுவலகங்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 01.09.2024 முதல் 30.09.2024 வரை நடத்திட
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 1472 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பயனாளிகளான கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது
முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இப்பேரணியானது அங்கன்வாடி பணியளர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தென்னம்பாளையம் பேருந்து நிறுத்தம் வரை நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஊட்டசத்து கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளின் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி.மகாலட்சுமி சங்கீதா, பெண்கள் ரோட்டரி தலைவர் திருமதி கிருத்திகா தங்கராஜ், செயலாளர் திருமதி ராதிகா விஸ்வநாதன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டபணிகள் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்கள். இப்பேரணியானது அங்கன்வாடி பணியளர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தென்னம்பாளையம் பேருந்து நிறுத்தம் வரை நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து, ஊட்டசத்து கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளின் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி.மகாலட்சுமி சங்கீதா, பெண்கள் ரோட்டரி தலைவர் திருமதி கிருத்திகா தங்கராஜ், செயலாளர் திருமதி ராதிகா விஸ்வநாதன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக திருப்பூர் செய்தியாளர் ஜாபர்.
No comments:
Post a Comment