திருப்பூர் நொய்யல் நதிக்கரையினிலே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் வெற்றி அறக்கட்டளையும் இணைந்து திருப்பூர் நகரின் நடுவே பாய்ந்து ஓடும் நொய்யல் நதியின் இரு கரையிலும் 500 மரங்கள் வளர்க்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கியப்பனவர் அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாநகர திமுக செயலாளர், மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ் குமார், துணை மேயர் எம்.பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொமுச துணை செயலாளரும், தெற்கு மாநகர திமுக செயலாளர் டிகேடி மு.நாகராசன், மாமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன், பகுதி திமுக செயலாளர் உசேன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment