திருப்பூரில் அமைதியான முறையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த ஏற்பாடு மாநகர காவல் ஆணையர் கூறினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 8 September 2024

திருப்பூரில் அமைதியான முறையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த ஏற்பாடு மாநகர காவல் ஆணையர் கூறினார்.

Mmm

திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி ரயில் நிலையம் முன்பு துவங்கி எம்ஜிஆர் சிலை மாநகராட்சி அலுவலகம் மங்கலம் சாலை வழியாக சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான ஆலங்காடு பகுதியில் நிறைவு பெற்றது இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஐ பி எஸ் அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா திருப்பூரில் நான்கு நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அதேபோல பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கூறினார் இந்த கொடி அணிவிப்பு நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் கிரிஷ் யாதவ், சுஜாதா, மனோகரன், உதவி ஆணையர்கள் அனில் குமார், செங்குட்டுவன் வேலுச்சாமி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad