திருப்பூர் ஆதரவு இயக்க அறக்கட்டளை சார்பில் கொங்கு மெயின் ரோடு முதல் ரயில்வே கேட் முதல் எம் எஸ் நகர் வரையிலுமான 60 அடி ரோட்டில் கண்ணகி நகர் மெயின் ரோடு வரை சாலையின் இருபுறமும் காய்கறி பழ வியாபாரம் செய்யும் மற்றும் கடைகளின் வண்டிகளும் சாலையில் நிறுத்தப்படுவதாகவும் இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மேலும்
திருப்பூர் மங்கலம் சாலையில் குளத்து புதூர் மற்றும் எல் அண்ட் டி தண்ணீர் டேங்க் முன்பு உள்ள ரோட்டில் குழிகள் தோண்டி பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
பணிகள் முடிந்து ஆறு மாதமாகியும் சாலைகளில் பள்ளம் சரியாக மூடவில்லை மேலும் மண்மேடுகள்,ஜல்லிகள் அதிகமாக உள்ளது இதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். இந்த நிகழ்வில் ஆதரவு இயக்க நிறுவனர் ஈஸ்வரன் மற்றும் ராக்கியப்பன், ராசா, அயோத்தி, லோகநாதன், காங்கயம் சட்டமன்ற தொகுதி மாரியப்பன், இடுவம்பாளையம் செல்வகுமார், அயோத்தி , மோகன் குமார், ஜீவானந்தம், ஜெயபிரகாஷ், ஆத்துப்பாளையம் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment