அலோசியஸ் ஆர்சி சர்ச்சில் இரண்டு நாட்களுக்கு முன்பு சர்ச் உண்டியலை உடைத்து திருட்டு. சிசிடிவி பதிவு வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள் அதிருப்தி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

அலோசியஸ் ஆர்சி சர்ச்சில் இரண்டு நாட்களுக்கு முன்பு சர்ச் உண்டியலை உடைத்து திருட்டு. சிசிடிவி பதிவு வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள் அதிருப்தி



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழமை வாய்ந்த அலோசியஸ் பள்ளி வளாகத்தில் ஆர்

சி RC சர்ச் உள்ள நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தேவாலயத்தில் வாரம் தோறும் வழிபாடு நடத்தி ஆலய உண்டியல் வைத்து அதன் பராமரிப்பு பணிக்காகவும் மற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு செலவு போன்ற பொது காரியங்களுக்கு செலவிட்டு வருகின்றனர்


 இந்த நிலையில் தேவாலயத்தில் நுழைந்த ஒரு மர்ம நபர் வழிபாடு செய்து விட்டு உண்டியலை

உடைத்து அதிலிருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளது அங்குள்ள சிசிடிவி யில் பதிவாகி உள்ளது உண்டியல் உடைத்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த திருடி சென்ற மர்ம நம்பரை தேடி வருகின்றனர் பட்டப் பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தாராபுரத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது தாராபுரத்தில் காவல்துறை ரோந்து பணிகளை அதிகப்படுத்தி இது போன்ற திருட்டு சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad