திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் 18 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு மாநகர திமுக செயலாளரும், மாநில தொமுச துணை செயலாளருமான டி.கே. டி.மு.நாகராசன், 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், மாவட்ட திமுக நிர்வாகி செ.திலக்ராஜ் , மற்றும் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment