திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டுக்கு உட்பட்ட குமரானந்தபுரம் ராஜீவ் காந்தி வீதியில் கழிவு நீர் வெளியேறுவதற்கான நிரந்தர தீர்வு காண்பதற்காக புதிய சாக்கடை கட்டுவதற்கும் குழாய்கள் மூலம் கழிவு நீரை வெளியேற்றுவதற்கும் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் உடன் 22 வது வார்டு திமுக செயலாளர் வி ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் கே பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு மாநகர சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர். வேலுச்சாமி எக்ஸ் எம் சி, டி.கே.ஞானவேல், சிபிஎம் ராஜேந்திரன், பிரபு,கௌரி சங்கர், மாகாளியப்பன், ஞானசேகர் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment